பெரம்பலூர் அருகே வனப்பகுதியில் தூங்கில் தொங்கியவரின் அடையாளம் கண்டது போலீஸ்!

schedule
2022-07-23 | 13:36h
update
2022-07-23 | 13:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The police identified the person who was Hanging in the forest near Perambalur!

File Copy

பெரம்பலூர் அருகே உள்ள எசனை வனப் பகுதியில், அடையாளம் தெரியாத வகையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ப்ளூ கலர் முழுக்கை சட்டை, வெள்ளை கருப்பு கட்டம் போட்ட கைலி, காலில் செருப்பு மாட்டிய நிலையில் இறந்து தொங்கி கொண்டு இருந்தார் . அவரை விசாரணையில் போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர்.

Advertisement

சடலத்தின் கீழே கருப்பு கலர் பேக் ஒன்று இருந்தது அதனை திறந்து பார்த்த பொழுது பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூரை சேர்ந்த காதர்கான் மகன் முகமதுசலீம் (28) முகவரியுடன் ஓட்டுநர் உரிமம் கிடைக்கப் பெற்றது. அதனை போலீசார் உறுதி செய்தனர். பின்னர், இறப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு வி.களத்தூரில் தேரை கொளுத்த முயற்சி செய்த போது, பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நபர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. உடற்கூறு ஆய்வு நடத்திய போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 10:40:51
Privacy-Data & cookie usage: