பெரம்பலூர் மாவட்டத்தில், நாளை முதல் பொங்கல் பரிசு வினியோகம் துவக்கம் : ஆட்சியர்

schedule
2018-01-05 | 16:33h
update
2018-01-05 | 17:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Pongal Prize for the Government of Tamil Nadu in Perambalur district tomorrow from distribution to public : Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி கரும்புத் துண்டு ஒன்று, தோராயமாக 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 282 நியாயவிலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 1,64,893 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளை முதல் (06.01.2018) முதல் வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினை தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலைக்கடைகளில் வேலைநாட்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகள், குறிப்பிட்ட எண் வாரியாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் பணிகளைக் கண்காணிக்க இணைப்பதிவாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் துணைப்பதிவாளர் ஆகியோர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

எனவே பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்று பொங்கல் விழாவினைக் சிறப்பாகக் கொண்டாட வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 15:01:13
Privacy-Data & cookie usage: