பெரம்பலூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

schedule
2018-02-05 | 14:09h
update
2026-07-04 | 21:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The poultry vaccine camp of Animal Husbandry Department in Perambalur district

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை விடுத்துள்ள தகவல்:

Advertisement

பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் ஆண்டு தோறும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு இருவார முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டு 09.02.2018 முதல் 22.02.2018 வரை இருவாரங்கள் கோழிகளுக்கான கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 8 வாரம் மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து கோழிகளுக்கும் தடுப்பூசி இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, அனைத்து கோழி வளர்ப்போர், பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெறலாம், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 21:40:35
Privacy-Data & cookie usage: