The Power supply stop Arumpavur and Polambady Surround areas: Electricity Board Announcement
அ.மேட்டூர் துணை மின்நிலையத்தில் இருந்து விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர்: அ. மேட்டூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை செப். 18-ந் தேதி (செவ்வாய்க் கிழமை ) நடைபெறுகிறது.
எனவே, மலையாளப்பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், கோரையாறு, கவுண்டர்பாளையம், அ.மேட்டூர், அரும்பாவூர், பூலாம்பாடி, பெரியசாமி கோவில், மேலக்குணங்குடி, வேப்படி, பாலக்காடு, சீனிவாசபுரம், கள்ளப்பட்டி
ஆகிய ஊர்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது என அ.மேட்டூர் துணை மின்நிலைய உதவிசெயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.