நாமக்கல்லில் முட்டை விலை 5 பைசா உயர்வு ஒரு முட்டை விலை 405 பைசாவாக நிர்ணயம்

schedule
2018-11-04 | 08:12h
update
2018-11-04 | 08:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The price of egg is 5 paisa per egg and the price is 405 paise

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 405 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

Advertisement

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (என்இசிசி) நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் 400 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 405 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விற்பனை விலை (பைசாவில்) :

ஹைதராபாத் 391, விஜயவாடா 402, பர்வாலா 400, மும்பை 446, மைசூர் 414, பெங்களூர் 413, கொல்கத்தா 452, டெல்லி 423, ஹொஸ்பேட் 378, சென்னை 420.

கோழி விலை:

முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 88 ஆக என்இசிசி நிர்ணயித்துள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ. 84 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 12:10:50
Privacy-Data & cookie usage: