The public distribution dept of the food-related Camp: perambalur Collector Announcement
மாவட்ட ஆட்சியர் சாந்தா விடுத்துள்ள தகவல் :
பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் 09.09.2017 அன்று நடைபெற உள்ளது.
மேற்படி முகாம், பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் பெரம்பலூர் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) மனோகரன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், வெண்பாவூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கு.பத்மாவதி தலைமையிலும், குன்னம் வட்டம், அத்தியூர்(வ) கிராமத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் எல்.இருதயமேரி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம், கூடலூர் கிராமத்தில் பொது விநியோகத்திட்டம் துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை தலைமையிலும் 09.09.2017 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.