பெரம்பலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் விட்டு விட்டு மழை ; மக்கள் மகிழ்ச்சி

schedule
2017-07-28 | 16:10h
update
2026-04-30 | 07:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The rains fall in Perambalur and the surrounding areas; People are happy

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை 3 மணி முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

வறட்சியின் காரணமாக தண்ணீர் அவதிப்பட்டு வரும் மக்கள் சற்று ஆறுதல் அடையும் விதமாக உள்ளது. மேலும், ஆடிப்பட்டம் தேடி விதை என்பதற்காக உழவர்கள் தங்களது வயலை உழவு செய்து வைத்துள்ளனர்.

ஆடிப் பட்டத்தில், மானாவரி சாகுபடி பயிர்களான மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வார்கள்.

இதே போன்று இன்னும் சில தினங்கள் மழை தொடர்ந்து பெய்தால் ஆடிப்பட்ட விதைப்பு செய்ய எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மழை பூமியை மட்டுமல்லாது விதை, உரம் பூச்சி மருந்து வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் வணிகர்கள் மனதை சற்று மகிழ்ச்சியுடன் குளிரச் செய்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 07:48:08
Privacy-Data & cookie usage: