The recruitment camp for Indian Air Force on April 20 and 22 || ஏப்.20, 22 ஆகிய தேதிகளில் இந்திய விமானப் படைக்கு ஆள்சேர்ப்பு முகாம்
20.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர் மற்றும் கரூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த நபர்களுக்கும்
22.05.2017 அன்று காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணிவரை வேலூர், கன்னியாகுமாரி, தேனி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், தர்மபுரி, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களை சேர்ந்த நபர்களுக்கும் சோதனை நடைபெறும்.
தகுதியுடைய நபர்கள் தங்களின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் மாற்று சான்றுகளுடன் வரவேண்டும். மாற்று சான்றிதழை கல்லூரியில் சமர்ப்பித்திருந்தால், பள்ளி-கல்லூரி முதல்வரிடம் அசல் சான்றுகள் பள்ளி – கல்லூரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற உறுதி சான்றிதழுடன் சுய சான்றொப்பமிடப்பட்ட (Self Attested) சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தகவல்களை அறிந்து கொள்ள http://www.airmenselection.gov.in, என்ற இணையதளத்தின் மூலமாகவும், தொலைபேசி 044-22390561 (direct) 044-22395553 (extension-7833) மூலமாகவும், co.8asc-tn@govt.in , மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.