The resettlement board was transferred to Ramanathapuram by the Slum Board

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் முலம் நீர்நிலை பகுதியில் குடியிருப்பவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் 90 சதவீத மானியத்தில் 256 வீடுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அல்லிகண்மாய், நீலகண்டி ஊரணி, பாம்புரணி உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிசை மற்றும் ஓட்டுவீடுகள் அமைத்து குடியிருந்து வருவோருக்கு அரசு தனியாக நீர்நிலை பாதிக்காத இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி 90 சதவீத மானியத்தில் பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. அந்தவகையில் ஏற்கனவே ராமநாதபுரம் கண்மாய் மற்றும் ஊரணி பகுதிகளில் வசித்து வந்த பலருக்கு முதற்கட்டமாக அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. தற்போது ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சாலையில் அரசு புறம்போக்கு இடத்தில் இரண்டாவது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிவடையும் தருவாயில் உள்ளது.

256 வீடுகள் குலுக்கல் முறையில் வழங்குவதற்கு பயனாளிகள் நேரடியாக வரவழைக்கப்பட்டு குடிசைமாற்று துறை அதிகாரிகள், மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் முன்னிலையில் ஒதுக்கீடு செய்வது குறித்தும் வீடுகள் நிலை குறித்தும் பயனாளிகளுக்கு விளக்கப்பட்டது. பின் பயனாளிகளுக்கு வீடுகளை பார்வையிட அனுமதி வழங்கப்பட்ட பின் குலுக்கல் நடந்தது.

இதில் 256 பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. வீடுகள் ஓதுக்கீடு செய்யும் விழாவில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி, நகராட்சி நகர் திட்ட அலுவலர் வனிதா குமாரி ஆகியோர் முன்னிலையில் ஒதுக்கீடு நடந்தது. குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் அசோகன் தலைமையில் உதவி பொறியாளர்கள் ரவிஅம்பேத்கார், கிருபாகரன் கொண்ட பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பயனாளிகளுக்கான ஒதுக்கீடு செய்து அதற்கான உத்தரவுகளை பயனாளிகளிடம் வழங்கினர்.

அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் பயனாளிகளுக்கு 90 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது. அதாவது 8.20 லட்சம் மதிப்பில் உள்ள வீடு ரு.82 ஆயிரம் மட்டும் செலுத்தி வீட்டை பெற்று கொள்ளலாம் என்றும், மொத்தமாக பணம் செலுத்த முடியாதவர்கள் மாதந்தோறும் தவணை முைறயில் செலுத்தலாம் எனவும் குடிசை மாற்று அதிகாரிகள் பயனாளிகளுக்கு விளக்கம் அளித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!