பெரம்பலூர் அருகே உண்டியலை உடைத்து, ஒரு லட்சம் மதிப்புள்ள காணிக்கைகளை கைலியில் அள்ளி சென்ற கொள்ளையர்கள்: போலீசார் விசாரணை!

schedule
2022-09-10 | 17:59h
update
2022-09-10 | 18:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The robbers who broke the hundial near Perambalur and took gifts worth one lakh in Lungi: Police investigation!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்றிரவு சுமார் 2 மணியளவில் பைக்கில் வந்த கொள்ளையர்கள் கோயிலில் இருந்து உண்டியலை உடைத்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் கட்டியிருந்த கைலியில், காணிக்கையாக பக்தர்கள் செலுத்திய சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பணத்தை அள்ளி சென்றனர்.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் அருகே உள்ள பொருத்தப்பட்டடிருந்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 21:02:07
Privacy-Data & cookie usage: