பெரம்பலூர் அருகே ஆடு மேய்த்த பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலி பறித்த கொள்ளையர்கள்!

schedule
2021-12-06 | 16:48h
update
2021-12-06 | 16:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The robbers who came on a motorcycle and snatched the gold chain from the woman who was herding sheep near Perambalur!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தை சேர்ந்த மணி மனைவி ஜெகதாம்பாள் (52). இவர், இன்று மாலை 5 மணியளவில் ஆதனூர் – சீராநத்தம் செல்லும் வழியில் சாலையின் ஓரமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்களில் வந்த, அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள், ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயின் மற்றும் காதில் அணிந்திருந்த 1/4 பவுன் தோடு ஆகியவற்றை அறுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின் பேரில், மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காது மற்றும் கழுத்தில் காயமடைந்த அந்தப் பெண் அரியலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 17:56:43
Privacy-Data & cookie usage: