பெரம்பலூர் அருகே மின் கசிவால் கூரை வீடு தீ பிடித்தது: ஒரு காளை மாடு 2 கன்று குட்டிகள் பலி

schedule
2017-07-17 | 20:20h
update
2026-07-03 | 03:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

the roof of the hut house that caught fire the electrical leakage of a bull and cow calves Kills 2 near in perambalur

பெரம்பலூர் அருகே ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கூரை வீடு தீ பிடித்து எரிந்தது, அதில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காளை மாடு, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு கன்று குட்டிகள் பலியானது மேலும் வீட்டில் வைத்திருந்த 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 28), பூச்சு மருந்து கடை நடத்தி வரும் இவரது மெத்தை வீட்டில் டைல்ஸ் கற்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் வீட்டின் பின் பகுதியிலுள்ள மாட்டு கொட்டகையுடன் கூரை வீட்டில் வசித்து குடும்பத்துடன் வருகிறார்.

இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக கூரை வீடு மற்றும் மாட்டு கொட்டகையில் தீ பற்றி எரிந்தது.

இந்த விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு காளை மாடு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு கன்று குட்டிகள், 45 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்பட 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.

இது குறித்த தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலையத்தார் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். குன்னம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 03:11:22
Privacy-Data & cookie usage: