வீடியோ எடுத்து மீண்டும் பெண்களை உறவுக்கு அழைக்கும் ஆளும் கட்சியினர்: நாம் தமிழர் கட்சி குற்றச்சாட்டு

schedule
2019-04-21 | 12:12h
update
2019-04-21 | 12:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The ruling party who calls for the took video and again calls for a Sex: accusing The Nam Tamil party

பெரம்பலூரில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் பாலியல் உறவுக்காக எடுத்து வைத்த வீடியோவை வைத்துக் கொண்டு மீண்டும் உறவுக்கு அழைத்து கட்டாயப்படுத்துவாகவும், காவல் துறை நடவடிக்கை முறையாக எடுக்காமல் விட்டு விட்டதாகவும், நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மாவட் செயலாளர் வழக்கறிஞர் அருள் பேட்டி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி சம்பவம் போல், பெரம்பலுாரிலும், அதே போன்ற பாலியல் வன்கொடுமையை முக்கிய அரசியல் பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர் அரங்கேற்றி உள்ளதாகவும், தற்போது இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பெரம்பலுார் பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்களை வளைத்து, பெரம்பலுாரில் உள்ள உல்லாச விடுதிகளில், அவரும் அவரது ஆதரவாளர் ஒருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், இதோடு மட்டுமல்லாமல், அப்பெண்களோடு தாங்கள் உல்லாசமாக இருப்பதை, அப்பெண்களுக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

அதை அப்பெண்களிடம் காண்பித்து மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்ததாகவும், இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்த, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள இளம்பெண், மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர் ஆகியோரை பெரம்பலுாரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் வைத்து, முக்கிய பிரமுகரும், அவரது ஆதரவாளரான வீடியோகிராபர் ஒருவரும் அடுத்தடுத்து உல்லாசமாக இருந்ததுடன், அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, இவர்கள், அவர்களை தாங்கள் கூப்பிடும் போதெல்லாம், ஆசைக்கு இணங்க வற்புறுத்தி உள்ளனர்.

தொடர்ந்து இவர்களின் தொந்தரவு தாங்கிக் கொள்ள முடியாத, 2 குழந்தைக்கு தாயான ஒரு பெண், தனது குடும்ப வாழ்க்கை பாதிப்பு ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுத்து, அந்த வீடியோ பதிவை தன்னிடம் வாங்கித் தருமாறு, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் புகார் செய்தாதாகவும், இதன்படி, அந்த அதிகாரியும் வீடியோ பதிவை வாங்கி போனில் இருந்து அழித்தாக கூறப்படுகிறது.

இதேபோல், பல பெண்களிடம் அந்த முக்கிய பிரமுகர், தனது ஆதரவாளருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றி உள்ளாராம். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஒரு இளம்பெண்ணை முக்கிய பிரமுகர் போனில் உல்லாசத்துக்கு அழைத்துள்ளாராம். இதோடு மட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம், கருவாடு குழம்பு மற்றும் இட்லி செய்து எடுத்து வரவும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். அந்த முக்கிய பிரமுகரின் ஆதரவாளர் இவரால் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பங்களும் அரங்கேறி உள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் பட்டியலில், தனியார் கல்லுாரியை பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களின், இந்த அந்தரங்க சம்பவம் குறித்து சில முக்கிய கட்சிகளின் தலைமைக்கு ஆதாரங்களுடன் கட்சியினர் அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் உள்ள நிலையில், பெரம்பலுாரை சேர்ந்த முக்கிய பிரமுகரின் பாலியல் பலாத்கார விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுக்க உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.03.2026 - 19:15:23
Privacy-Data & cookie usage: