The sand, the water shortage problem of the clean india of the personal toilet scheme to sleep
ஒரு பக்கம் விழிப்புணர்வு செய்யப்பட்டாலும், மறுபக்கம் அதே அளவிற்கு மணல் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு காரணம் காட்டி கிடப்பில் கிடக்கிறது. மேலும், கழிப்பறை பணிகளுக்காக ஆங்காங்கே கொண்டு சென்று வைக்கப்பட்ட ஹலோ பிளாக் கற்கள், கழிப்பறை வளையங்கள், கோப்பைகள் , சிமண்ட் மூட்டைகள், கதவுகள் வெயில் மழையில் வீணாகி வருகின்றன.
மேலும் , ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் கழிப்பறைகாளல் நிலத்தடி நீர் மட்டத்துடன் கலந்து ஆழ்குழாய் நீருடன் கலக்கும் வாய்ப்பு உள்ளதால், ரூ. 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் சுற்றுச் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிவறையோ அல்லது கோவை போன்ற நகரங்களில் கண்டுபிடித்துள்ள எரிவாயு எடுக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.
தற்போது விலை உயர்ந்துள்ள மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தூய்மை இந்தியா திட்டம் செம்மையாக தூங்கி வழிகிறது.