பெரம்பலூர் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியின்றி வைத்திருந்த மணல் பறிமுதல்

schedule
2018-07-09 | 20:21h
update
2026-08-11 | 02:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The sand was seized without the permission of the government in private territory near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் மணல் திருட்டு அதிகமாக உள்ளதாக குன்னம் தாசில்தார் சிவாவிற்கு கிடைத்த தகவல் பேரில், வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் அகரம்சீகூர், அத்தியூர், வயலூர்ர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

Advertisement

அப்போது அகரம்சீகூர் – அரியலூர் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அருகில் உள்ள வெள்ளாற்றில் திருட்டுதனமாக கொண்டுவரப்பட்டு கிடந்த சுமார் 6 யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மேற்படி மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் குன்னம் தாசில்தார் சிவா வெள்ளாற்று படுகையில் உள்ள திருமாந்துறை, ஆடுதுறை, அத்தியூர், வசிஷ்டபுரம் பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 02:34:43
Privacy-Data & cookie usage: