பெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரம்: கணவனை கத்தியால் குத்திய கள்ளகாதலனுக்கும் கத்திகுத்து

schedule
2017-12-12 | 15:55h
update
2017-12-12 | 16:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The scandalous affair near Perambalur: knife wounds

பெரம்பலூர் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கள்ளக்காதலன் கள்ளக்காதலியின் கணவனை கத்தியால குத்தி கொலை செய்ய முயன்ற போது, அதே கத்தியை பிடுங்கி கணவன் கள்ளக்காதலனை சராமரியாக குத்தியதில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சிறுவயலூர். அதே ஊரைச் சேர்ந்த சின்னு – அழகம்மாள் இவர்களின் மகன் வீரமுத்து (வயது 40), இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியன் மல்லிகா இவர்களது மகள் தமிழரசி (வயது 36) என்பவருக்கும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இதில், வீரமணி (வயது 13), மணிவேல் (வயது 10) என இரு குழந்தைகள் உள்ளனர். சுமார் கடந்த 10 ஆண்டுகளாக வீரமுத்து வளைகுடா நாடுகளுக்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு தமிழரசிக்கு அதே மற்றொரு சின்னு என்வரின் மகன் கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது தமிழரசியின் மாமனார் – மாமியாருக்கு தெரிய வந்தது. இதை கண்டித்து உள்ளனர். ஆனால், தமிழரசியும் கண்ணனும் தொடர்பை துண்டிக்கக வில்லை. இது குறித்து வீரமணிக்கு பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில், சொந்த ஊருக்கே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலையை விட்டு திரும்ப வந்துவிட்டார்.

ஆனாலும், தமிழரசியும் கண்ணனும் சந்தித்து வந்துள்ளனர். இதனை வீரமுத்து கண்டித்துள்ளர். இது குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்ப்பட்டது. அங்கிருந்த காவலர்கள் கண்ணன் மற்றும் தமிழரசிக்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனால், இதையும் தாண்டி இருவரும் சந்திப்பு நடந்ததால், வீரமுத்துவிற்கும், தமிழரசிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழரசி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் குடியிருக்கும் அனுக்கூர் குடிக்காடு அருகே காட்டுக் கொட்டகை பகுதிக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 8.30 மணியளவில் தமிழரசியை காணமுடியாத ஆத்திரத்தில் தமிழரசியின் கணவரான வீரமுத்து தீர்த்து கட்ட கத்தியுடன் வந்து வாக்குவாத்தில் ஈடுபட்டு கத்தியை எடுத்து வீரமணியை குத்தினார். அதில் வீரமுத்கதுவிற்கு கையில் காயம் ஏற்பட்டது. சுதாகரித்த வீரமுத்து, கண்ணன் வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரை மீண்டும் உடலின் பல இடங்களில் குத்தினார். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

காயமடைந்து இருவரும் பெரம்பலூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிப்பட்டனர். கண்ணன் திருச்சி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வந்த வீரமுத்துவை வி.களத்தூர் போலீசார் நைசாக பேசி அழைத்து சென்று வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வீரமுத்துவின் பெற்றோர் பெரம்பலூர் நீதிமன்றத்தில் தன் மகன் சட்டத்திற்கு புறம்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கட்டாயத்தின் பேரில் அழைத்து சென்று இருப்பது குறித்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்காதல் விவகார மோதலில் கணவனும், கள்ளக்காதலனும் ஒருவரை ஒருவர் கத்தியால் மாற்றி மாற்றி குத்தி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:05:51
Privacy-Data & cookie usage: