தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்; அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் தொடங்கி வைத்தார்!

schedule
2026-02-09 | 16:59h
update
2026-02-09 | 16:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The scheme to provide food to sanitation workers was launched by Minister Sivasankar in Perambalur!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியளர்களுக்கு   உணவு வழங்கும் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் ஜே.கே திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரலையில் பார்வையிட்டு, பெரம்பலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

Advertisement

திங்கள் கிழமை 6 இட்லி, 1 மெது வடை , சாம்பார் 250 கிராம், செவ்வாய் கிழமை ரவா கிச்சடி 500 கிராம், காரசட்னி 100 கிராம்,  புதன் கிழமை வெண்பொங்கல்  500 கிராம், சாம்பார் 250 கிராம், வியாழன் கிழமை ரவா உப்புமா 500 கிராம், மல்லி பொதினா சட்னி 250 கிராம்,  வெள்ளி கிழமை 6 இட்லி, 1 மெது வடை   , சாம்பார் 250 கிராம், சனிக்கிழமை ரவா பொங்கல் 500 கிராம், சாம்பார் 250 கிராம், ஞாயிறு கிழமை சேமியா கிச்சடி 500 கிராம், சாம்பார் 250 கிராம் ஆகியவை சுழற்சி முறையில் வழங்கப்படும்.
 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் 18 நபர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 155 நபர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் 42 நபர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள் 34 நபர்கள், பொது கழிவறை தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒட்டுநர்கள் 18 நபர்கள் என மொத்தம் 267 நபர்களுக்கும்,

அரும்பாவூர் பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 07 நபர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 45 நபர்கள், குரும்பலூர் பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 5 நபர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 48 நபர்கள், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 10 நபர்கள், ஒப்பந்த பணியாளர்கள் 37 நபர்கள், பூலாம்பாடி பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் 13 நபர்கள் ஒப்பந்த பணியாளர்கள் 35 நபர்கள் என   மொத்தம் 467 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை தலைவர் ஆதவன், நகராட்சி கமிசனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் ரவி உதவி பொறியாளர் சரவணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 05:26:11
Privacy-Data & cookie usage: