The scholarships apply to the unemployed – the employment office

பெரம்பலூர் : 10ஆம் வகுப்பு தேர்ச்சியடையாதவர்கள் முதல் பட்டதாரிகள் வரை வேலைவாய்பபு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து வருடங்களுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பதிவுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவிரும்புவோர் தங்களது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருடங்கள் முடிவடைந்தவராக இருக்க வேண்டும். 30.09.2012க்கு முன்னர் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

தனது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையை தவறாது தொடர்ந்து புதுப்பித்தல் செய்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்; 30.09.2017 அன்று 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

மனுதாரருடைய குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரு.50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ – மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

மனுதாரர் சுயமாக தொழில் செய்பவராகவோ, சுயமாக சம்பாத்தியம் செய்பவராகவோ இருத்தல் கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் 30.11.2017 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00-மணி முதல் மதியம் 1.00-மணி வரை பெறப்படும்.

மனுதாரர் விண்ணப்பப்படிவம் பெற்றுக் கொள்வதற்கு தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை. குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகிய இவற்றுடன் வரவேண்டும். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெறதேவையில்லை.
இந்த வாய்ப்பை தகுதியுடைய அனைவரும் பயன்படுத்திக்ககொள்ள வேண்டும் என வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அறிவிக்கப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!