பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த மகனால் பரபரப்பு!

schedule
2021-12-25 | 05:03h
update
2021-12-25 | 05:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The son who brought home the body of the mother who was buried near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் வேலு மனைவி மூக்காயி. இவர் சுமார் 11 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு வேல்முருகன் (38) என்ற மகன் உள்ளார். பெற்றோர்கள் இருவரும் இறந்து விட்ட நிலையில் சற்று மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்த வேல்முருகன் தாய் இறந்த சோகத்தால் கடுமையான துக்கத்தில் இருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுடுகாட்டில் தாயின் உடல் அடக்கம் செய்யப்பட்ட குழிப் பகுதியில் சுற்றி சுற்றி அழுது கொண்டே இருந்துள்ளார். பின்னர் குழியை தோண்டி சடலத்தை எடுக்க முயன்றுள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். நேற்று மாலை மனவேதனையில் இருந்த வேல்முருகன் தாயின் உடலை தோண்டி சுடுகாட்டில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்து வைத்திருந்தார். அக்கம் பக்கத்தில் வசிக்கும் வீடுகளுக்கு துர்நாற்றம் வீசியதை அடுத்து அவர்கள் குன்னம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வேல்முருகனையும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:33:05
Privacy-Data & cookie usage: