the Sri Sivadharma Sastha Iyyappa Temple mandala pooja in sikkal


ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் ஸ்ரீசிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மண்டல புஜை வெகு விமர்சையாக நடந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கிராமத்தில் ஸ்ரீசிவதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் கிராம மக்களில் ஏராளமானோர் ஜாதி மத பேதமின்றி கார்த்திகை மாதம் 1ம் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து வருகின்றனர். கோயிலில் தினமும் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேசக ஆராதனைகள் நடந்து வருகின்றன.

குருநாதர் நாகரத்தினம் தலைமையில் ஐயப்ப பக்தர்கள் கோயிலில் தங்கி தர்ம காரியங்களும், சேவைகளும் செய்து வருகின்றனர். மண்டல புஜையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கியது. அதனை ெதாடர்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரை நாக தேவதை பிரதிஷ்டை நடந்தது.

காலை 8 மணிக்கு செண்டை மேளம் முழங்க நுாற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மற்றும் கிராம பொது மக்கள் திரளாக திரண்டு தங்கள் உடம்பில் வர்ணம் புசி ஊரின் வன்னிவிநாயகர் கோயிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேட்டை துள்ளியவாறு வந்து ஐயப்பன் கோயிலை அடைந்தனர்.

பின் கோயில் முன்புள்ள பஸ்ம குளத்தில் ஐயப்பன் ஆராட்டு விழா நடந்தது. அதன்பின் ஐயப்பனுக்கு 13 வகையான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மெகா தீபாராதனை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் ஐயப்பன் பாடல்கள் பாடியும் ஐயப்ப மந்திரம் சொல்லியவாறும் தரிசனம் செய்தனர். பின் ஐயப்ப பக்தர்களுக்கு குருநாத சாமிகள் பிரசாதம் வழங்கினர்.

சேவா சங்கம் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் செல்லதுரை, பொருளாளர் வீரகுமார் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். சத்குநாதர் முனியாண்டி மண்டல புஜை சிறப்பு மற்றும் ஐயப்பன் வரலாறு குறித்து சிறப்பாக தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது.

மாலையில் மண்டல புஜை திருவிளக்கு புஜை நடந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். சேவா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஐயப்ப பக்தர்கள் மற்றும் மக்கள் ஐயப்பன் தரிசனத்தை இடையுறின்றி தரிசிப்பதற்கு தேவையான வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களிலும் ஈடுபட்டு இருந்தனர்.

செய்தி: சிவசங்கரன், ராமநாதபுரம்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!