மாநில அளவிலான ஸ்கேடிங் தெரிவுப் போட்டிகள் பெரம்பலூர் நடக்கிறது

schedule
2017-09-21 | 15:42h
update
2026-07-03 | 20:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The state-level skating competition takes place in Perambalur

பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் விடுத்துள்ள தகவல் :

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (SGFI) நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான ளுமயவiபெ தெரிவுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள Skating மைதானத்தில் வரும் செப்-30 அன்று நடைபெற உள்ளது.

Advertisement

தெரிவுப் போட்டிகளில் ரு-11 / 14 / 17 /19 வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்களது வயது மற்றும் பிரிவு வாரியாக தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

இப்போட்டிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மாணவ – மாணவியர் வருகை புரிந்து கலந்து கொள்ள உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 6 மாணவ மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட 48 மாணவ மாணவியர்கள் 09.12.2017 முதல் 12.12.2017 வரை கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் என்ற இடத்தில் நடைபெறும் தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

30.09.2017 அன்று மாணவிகளுக்கு நடைபெறும் ஸ்கேட்டிங் தெரிவுப் போட்டிகள் ஸ்கேடிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.

01.10.2017 காலை 6.00 மணி அளவில் மாணவ. மாணவியர்களுக்கு சாலையோர ஸ்கேடிங் தெரிவு போட்டிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே நடைபெற உள்ளது.

02.10.2017 அன்று மாணவர்களுக்கு ஸ்கேடிங் தெரிவுப் போட்டிகள் ஸ்கேடிங் மைதானத்தில் நடைபெற உள்ளது. மாலை அனைத்து தெரிவு போட்டிகளும் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 20:28:21
Privacy-Data & cookie usage: