the state-wide protest on July 27 dairy cows: The milk producers in the Tamil Nadu resolution passed

ஒரு லிட்டர் பாலை மானிய விலையில் ரூ. 25 க்கு வினியாகம் செய்யக் கோரி, வரும் ஜுலை 27ம் தேதி கறவை மாடுகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் : பெரம்பலூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

perambalur-milk-producer

பெரம்பலூரில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலக் குழு கூட்டம், சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்றது.

அச் சங்க தலைவர் எ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் பெரம்பலூர் என்.செல்லதுரை, மதுரை பி.எஸ்.முத்துபாண்டி, திண்டுக்கல் எ.ராஜரத்தினம், கிருஷ்ணகிரி கே.சி.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுசெயலாளர் கே.முகமதுஅலி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது :

தமிழகத்தில் ஆரம்ப பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கக்கூடிய பாலில் ஒரு பகுதியை திருப்பி அனுப்புகின்றனர். சில நாட்கள் விடுமுறை என்று கூறியும் திருப்பி அனுப்பி விடுகின்றனர். சில பகுதிகளில் காலையில் மட்டும் பாலை வாங்கி கொண்டு, மாலை வாங்க மறுக்கின்றனர்.

மேலும் ஆவின் நிறுவனம் 30 லட்சம் வரை பால் கொள்முதல் செய்தது. ஆனால் தற்போது 25 முதல் 27 லட்சம் வரை தான் கொள்முதல் செய்கிறது. கூட்டுறவு சங்கத்திலும் பாலை குறைத்து கொள்முதல் செய்ய நிர்ப்பந்திக்கிறது. எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறினார்.

பின்னர், நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பால் முழுவதும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் நடப்பாண்டில் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 35 ரூபாயும், எருமைப் பாலுக்கு 45 ரூபாயும் உயர்த்தி வழங்வேண்டும், முதல் அமைச்சரின் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும் சேர்த்து வழங்கி பால் விற்பனையை பெருக்க வழிவகை செய்ய வேண்டும்,

நடைபெற்ற தேர்தலில் முதல் அமைச்சர் அறிவிப்பின் படி அரசின் மானியத்தில் 1 லிட்டர் 25 ரூபாய்க்கு விநியோகிக்க வேண்டும், 50 சதவீதம் மானிய விலையில் கால்நடை தீவனங்கள் வழங்க வேண்டும்,

நிலுவையில் உள்ள பாக்கி தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோhpக்கைகளை அமல் படுத்த கோரி ஜீலை மாதம் 26 தேதி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் கறவை மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

முடிவில் கரும்பு விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!