திருமண செலவிற்கு பணம் இல்லாத விரக்தியில் திருப்பூரில் புது மாப்பிள்ளை தற்கொலை!

schedule
2018-05-10 | 21:20h
update
2018-05-10 | 21:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The suicide of a new groom in the frustration of Tirupur in marriage expenses

திருப்பூர், கேவிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர் ரூபேஷ்குமார். தனியார் நிறுவனத்திலும் மின் வாரிய சம்பந்தமாக பணிபுரிந்து வருகிறார். ரூபேஷ்குமாருக்கும், அவரது உறவுக்கார பெண்ணுக்கும் வரும் 20ம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

Advertisement

இந்நிலையில் திருமண செலவிற்கு பணம் இல்லாததால் பல்வேறு இடங்களில் கடன் கேட்டும் பணம் கிடைக்காத காரணத்தால் ருபேஷ்குமார் விரக்தியுற்ற நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரூபேஷ்குமார் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த, திருப்பூர் மத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபேஸ்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமண செலவுக்கு பணம் இல்லாமல் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags: Tiruvallur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.04.2026 - 10:56:34
Privacy-Data & cookie usage: