பெரம்பலூர் தனியார் மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து நோயாளி குதித்து தற்கொலை

schedule
2017-10-26 | 20:19h
update
2017-10-26 | 20:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The suicide of the patient jumped from the 4th floor of the private hospital in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு கடலூர் மாவட்டம், சிறுகடம்பூரை சேர்ந்த துரைராஜ் மகன் இளையராஜா (வயது 36), கடப்பா மற்றும் பளிங்கு கற்களில் பெயர் பொறிக்கும் பணியை பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கடை வைத்து செய்து வந்தார். இந்நிலையில் மதுவிற்கு அடிமையானதால் ஏற்பட்ட குடும்ப தகராறில் மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்று விட்டனர்.

Advertisement

மதுவால் உடல் நலம் பாதிக்கப்பட்ட இளையராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனம் வெறுத்து போன இளையராஜா இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து கண்ணாடியை உடைத்து கொண்டு குதித்து தற்கொலைக்கு முயற்சித்ர்தார். அப்போது தரையில் விழுந்தததில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சையின் பொது இளையராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட இளையராஜாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 02:46:16
Privacy-Data & cookie usage: