நாமக்கலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

schedule
2018-05-10 | 14:34h
update
2018-05-10 | 16:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Tamilnadu VAO’s Association demonstrated various demands in Namakkal

நாமக்கல் : நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். வட்ட தலைவர் செந்தில் கண்ணன், செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தகுதிகாண் பருவ ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை விடுவிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் பயிர் இன்சூரன்ஸிற்கு வழங்கிய அடங்கலில் பரப்பு தவறாக இருப்பதாக கூறி, தவறான தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் நாமக்கல் தாலுகாவை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் இளையராஜா நன்றி கூறினார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.09.2026 - 02:36:18
Privacy-Data & cookie usage: