கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் புதிய குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-04-01 | 13:33h
update
2022-04-01 | 13:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The task of surveying new Houses under the Kalaigar housing scheme; Perambalur Collector Info!

Advertisement

பெரம்பலூர் கலெக்டர் (பொ) நா. அங்கையற்கன்னி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2010-ஆம் ஆண்டிற்கு பிறகு புதிதாக உருவான குடிசை வாழ் குடும்பங்கள் கணக்கெடுப்பு பணி 04.04.2022 முதல் 25.04.2022 வரை நடைபெற உள்ளது. 28.02.2022ம் நாளில் ஊராட்சி வீட்டு வரி கேட்பு பதிவேட்டின்படி உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பின் பணியின்போது தங்களது ஆதார் எண், வீட்டு வரி, வீடு எண் மற்றும் மின் இணைப்பு எண் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய கணக்கெடுப்பு குழுவிடம் வழங்கி தங்களது பெயரினை பதிவு செய்துகொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 16:31:53
Privacy-Data & cookie usage: