பெரம்பலூரில்

வகுப்பறை கையேட்டை ” கைவிடக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

schedule
2017-06-28 | 19:40h
update
2026-04-30 | 00:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The teachers demanded to abandon the “classroom booklet” in Perambalur

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திசிவம் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் செல்லதுரை, மாவட்ட துணைத் தலைவர் இருதயராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தின் போது, வகுப்பறை கையேட்டின் படி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வகுப்பறை கையேட்டின் படி பள்ளிகள் செயல்பட்டதால் பெரம்பலூர் மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. எனவே மற்ற மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பள்ளி கல்வித்துறையின் பாட அட்டவணையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ள “வகுப்பறை கையேடு” நடைமுறையை கைவிட வேண்டும், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம், நீதிபோதனைகள் பாடவேளைகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் கோவிந்தன், மாநில துணை தலைவர் கோபிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பழனிசாமி நன்றி கூறினார். இதில், 20 பெண் ஆசிரியர்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
30.04.2026 - 00:38:48
Privacy-Data & cookie usage: