திமுக குறுநில மன்னர்களின் கூடாராம்! ஆ.ராசா உள்பட எவரும் முதலமைச்சர் வேட்பாளராக முடியாது? ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேச்சு!!

schedule
2021-01-06 | 04:22h
update
2021-01-06 | 04:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The tent of the DMK monarchs! Can no one, including A. Raja, Cant be the Chief Ministerial candidate? RT Ramachandran MLA Speech

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் சு ஆடுதுறையில் ஒன்றிய செயலாளர் கே.எஸ். செல்வமணி தலைமையில் நடந்தது. ஒன்றிய இணைச் செயலாளர் அமுதா கொளஞ்சிநாதன், ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பிள்ளை இழங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், அதிமுக தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசிய அவர் தொடர்ந்து பேசியதாவது: அதிமுக தொண்டர்களின் பலத்தால் உருவான கட்சி, திமுகவைப் போல குடும்ப கட்சி அல்ல! கொத்தடிமைகளின் கூடாரமும் அல்ல! திமுக தலைவர் ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் அரை மணி நேரம் பேச முடியுமா, முடியாது. ஏனென்றால் அவர்கள் மக்களோடு மக்களாக வாழாமல், அரண்மனையில் வாழுகிறார்கள். தேர்தல் முடிந்த உடன் திரும்ப பங்காளவிற்கு சென்று விடுவார்கள். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் பொதுமக்களின் கேள்விகளையும் கொள்கைகளையும் எதிர் நோக்க வேண்டும். பொறுமையில்லை என்றால் அரசியலை விட்டு விடவேண்யதுதான்.

Advertisement

ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசிய ராசா நான்தான் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என கூற முடியுமா? இல்லை ஒரு செல்போனில் வீடியோ வெளியிடமுடியமா என்றாவது ஒரு நாள் நான் முதலமைச்சர் வேட்பாளராக முடியும் என அறிவிக்க முடியுமா! என சவால் விடுத்தார். நான் அறிவிக்கிறேன், இந்த கூட்டத்தில், ஊடகத்தினர், பொதுமக்கள், கட்சியினர், உளவுபிரிவு போலீசார் முன்னிலையில் நானும் ஒரு நாள் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராவேன் என்று, ஏன் நான் மட்டும் இங்கு இல்லை, இங்கு இருக்கும் யார் வேண்டுமானாலும், எந்த பதவிக்கும் போட்டியிட முடியும். திமுகவில் முடியுமா! திமுக கட்சியில் ஆங்காங்கே குறுநில மன்னர்கள் போன்று பலர் கட்சியில் உள்ளனர், அவர்களை மீறி உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் வேறு பதவிகளுக்கு வரமுடியாது. குறுநில மன்னர்களை சமாளிக்கவே இந்த ஆயுள் திமுக தொண்டர்களுக்கு தீர்ந்துவிடும். முக.அழகிரி கூறியது போல் ஸ்டாலின் என்றுமே வருங்கால முதல்வர்தான்!.. ஒரு நாளும் முதல்வராக முடியாது.

திமுக தொண்டர் ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் ராசா திமுக தலைமைக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்தார். அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தினமும் ஒவ்வொரு வீதியாக சென்று பத்து ஓட்டுக்கள் சேகரித்தால் அதிமுக மகத்தான வெற்றி பெறும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்பார்.
ஒவ்வொரு தொண்டனும்அதிமுக கொடியும், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக ஆ ட்சியின் சாதனைகளை வரும் தேர்தலில் கடுமையாக உழைத்து நாம் வெற்றி பெற வேண்டும் இவ்வாறு ராமச்சந்திரன் பேசினார்.

கூட்டத்தில் பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் காருண்ய மூர்த்தி, அழகுதுரை, வேப்பூர் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கண்மணி துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச் செயலாளர் அருள் ஜோதி இராமசாமி நன்றியுரை கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.08.2026 - 13:14:20
Privacy-Data & cookie usage: