பெரம்பலூர் அருகே கோவிலில் திருடிவிட்டு தப்பி செல்வதற்காக சுவிட்சை தப்பாக போட்டு சிக்கிய திருடன்

schedule
2017-08-14 | 20:20h
update
2026-06-26 | 04:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The thief who stole the switch to steal the temple near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள தங்கநகரம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் குடிபோதையில் திருட முயன்ற கடலூர் மாவட்டம் தொழுதூர் அடுத்த பரங்கியம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம் என்பவரை குன்னம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

தங்கநகரம் மாரியம்மன் கோவிலில் இதுவரை 10 முறை திருட்டு சம்பவம் நடந்துள்ளது.குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை

இந்நிலையில் நேற்று இரவு கும்மிருட்டாக காணப்பட்டதால் திருடிய பொருட்களை கையில் எடுத்து கொண்டு பாதுகாப்பாக வெளியே செல்ல வேண்டுமென்று லைட்டை போடலாம் என சுவிட்சை பரமசிவம் ஆன் செய்துள்ளார். சுவிட்சை மாற்றி போட்டதால் மேளதாள இசைக்கருவி ஒலிக்க தொடங்கியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் மேளதாள இசைக்கருவி ஒலிக்கும் சத்தம் கேட்டு தங்கநகரம் கிராம மக்கள் கோவிலுக்கு ஓடி சென்று பார்த்த போது, பரமசிவம் திருட்டு பொருட்களுடன் திரு,திருவென முழித்து கொண்டு நின்றுள்ளார். இதனையடுத்து அவரை கையும், களவுமாக பிடித்த பொது மக்கள் சரமாரியாக தாக்கி குன்னம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இவர் வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் தொடர்புடையவரா என இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் தலைமையில் குன்னம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 04:51:30
Privacy-Data & cookie usage: