The three-year record presentation of the Central Government at Perambalur: MP Ila. Ganesan visit
இதன் ஓர் அங்கமாக, பெரம்பலூரில் ஜுன் 24, சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு சாதனை விளக்கக் கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்ரமணியம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் பங்கேற்று விழா பேருரையாற்றவுள்ளார். மத்திய அரசு, மக்களுக்காகச் செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்கள் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கும், பயன்பெறுவதற்கும் ஓர் அரிய வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமையவுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்திட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.