பெரம்பலூர் அருகே லாரி மோதியதில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் நசுங்கி பலி!

schedule
2020-06-30 | 10:26h
update
2020-06-30 | 10:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The unidentified a young man killed in collision with lorry overturns near Perambalur

பெரம்பலூர் அருகே இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் பலியானர், விபத்திற்கு காரணமாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


திருவண்ணாமலையில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை திருவண்ணாமலையை சேர்ந்த சேகர் மகன் செல்வம் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். லாரி திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் ஆஞ்சிநேயர் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் மீது லாரி மோதியதில், கால்கள் முறிந்து, உடல் நசுங்கியதால் ரத்த் வெள்ளத்தில் மிதந்தார். இது குறித்து அவ்வழியே வந்தவர்கள் கொடுத்த தகவலின் விரைந்து வந்த பாடாலூர் போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்கு அனுப்ப முயற்சித்தனர். அதற்குள் அவர் உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உயிரிழந்த நபர் யார், எதற்காக இப்பகுதிக்கு வந்தார் என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 21:38:12
Privacy-Data & cookie usage: