உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நாளை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது

schedule
2017-06-29 | 20:25h
update
2026-05-02 | 08:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The voter list for local elections is being held publicly on tomorrow

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நாளை வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

Advertisement

இந்த வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கோ, பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை கூற விரும்புவோர் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதி நாள்வரை தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரிலோ அல்லது 04328-277925 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம்.

கோரிக்கை மற்றும் மறுப்புரைகளின்மேல் வருவாய் கோட்டாட்சியரால் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ வழங்கப்படும் ஆணைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஊரக மற்றும் நகர்புற வாக்கு பதிவு அலுவலர்களால் முறையாக வெளியிடப்படும்.

எனவே, நாளை வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கபடவுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா என்றும், ஏதேனும் திருத்தங்கள் உள்ளதா என்றும் வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 08:44:10
Privacy-Data & cookie usage: