பெரம்பலூர் நகரில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத நகராட்சியை கண்டித்து சாலைமறியல் !

schedule
2017-04-05 | 17:20h
update
2026-06-24 | 02:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

the water did not supply system in the Perambalur municipality condemned the public roadblock !

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 11வது பொதுமக்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று பெரம்பலூர் புதிய – பழைய பேருந்து நிலையம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் முரளி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு நடத்தினார். ஆனால், பொதுமக்களுக்கும், ஆணையருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. பின்னர் நடவடிக்கை எடுப்பதாகவும், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவாதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

ஒரு மணி நேரம் நடந்த சாலைமறியல் பேராட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆத்தூர்,துறையூர், திருச்சி, அரியலூர் சென்னை மார்க்கத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நெடுந்தூரம் நின்றது. பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு பின்னர் வாகனங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 02:06:35
Privacy-Data & cookie usage: