“The whole block will call the struggle, not only by leaders of companies completely shut! SUPPORT !!: After notification of the Milk agents’ union.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும், மாநிலத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை :

தூத்துக்குடி மாவட்டத்தில் எம் மண்ணின் மைந்தர்கள் மீது எடப்பாடி பழனிச்சாமியின் ஏவல்துறையாக செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து அனைத்துக் கட்சிகள் சார்பில் நாளை (25.05.2018) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள திமுகவின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் முக்கியமான வேண்டுகோள்.

அரசியல் கட்சித் தலைவர்களே நீங்கள் அறிவிக்கும் முழு அடைப்பு போராட்டமானது பெரும்பாலும் வணிகர் சங்கப் பிரதிநிதிகளோடு கலந்து பேசாமல் அவசரகதியில் அறிவிக்கும் போராட்டங்களாகவே அமைந்து விடுகிறது. அதுமட்டுமன்றி சொற்ப வருமானத்தை இலக்கு வைத்து செயல்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர வணிக நிறுவனங்களை மட்டுமே நீங்கள் அறிவிக்கும் போராட்டங்கள் குறி வைத்து நடத்தப்படுகிறது. ஆனால் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் வருவாய் ஈட்டி வரும் தங்களைப் போன்ற தலைவர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்களோ, தொழிற்சாலைகளோ, தொலைக்காட்சி நிறுவனங்களோ, பொழுதுபோக்கு மையங்களோ இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு உள்ளாவதில்லை. அப்படியானால் அரசியல் கட்சித் தலைவர்களாகிய உங்களுக்கு வந்தால் இரத்தமாகவும், சிறு, குறு, நடுத்தர வணிகர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாகவுமே நீங்கள் பார்த்து வருகிறீர்கள் என்கிற குற்றச்சாட்டை ஆணித்தரமாக முன் வைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் நீங்கள் அறிவிக்கும் எந்த ஒரு முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் வணிகப் பெருமக்கள் எவரும் முழு மனதோடு ஒத்துழைப்பு தருவதில்லை. ஏனெனில் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் உங்கள் கட்சிப் பிரதிநிதிகள் கடைகளை அடைக்கச் சொல்லி அராஜகத்தில் ஈடுபடுவார்கள், அதனால் பொருள் இழப்பு ஏற்படும் எதற்கு தேவையில்லாமல் பொருள் இழப்பு ஏற்பட வேண்டும் என்கிற காரணத்தால் கடையடைப்பு போராட்டத்தன்று வணிகப் பெருமக்கள் தங்களின் கடைகளை அடைக்கின்றனர். என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட எம் மண்ணின் மைந்தர்களை இழந்து தவிப்பதில் வணிகப் பெருமக்களுக்கே பெரும்பங்கு என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஏற்கனவே ஜி.எஸ்.டி, உணவு பாதுகாப்பு சட்டம், ஆன்லைன் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வணிகப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் காவேரி, நீட், ஸ்டெர்லைட், இன, மொழிப் பிரச்சினைகள் என எந்த ஒரு பிரச்சினையானாலும் சரி உடனே உங்களுக்கு ஞாபகம் வருபவது கடையடைப்பு போராட்டம் மட்டும் தான். ஏனெனில் வணிகப் பெருமக்கள் மட்டும் தானே தங்களை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை. நாளை (25.05.2018) தாங்கள் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தில் புதிய மாற்றமாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், (செய்தி தொலைக்காட்சி தவிர) பொழுதுபோக்கு மையங்கள் என அனைத்திற்கும் அன்றைய தினம் முழு அடைப்பு நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாயை ஸ்தம்பிக்கச் செய்யலாமே. அவ்வாறு நீங்கள் செய்யும்பட்சத்தில் தான் முழு அடைப்பு போராட்டமானது முழுமையாக வெற்றி பெறும். இல்லையெனில் சாமானிய மக்களையும், வணிகப் பெருமக்களையும் தூண்டி விடுகின்ற முயற்சியாகவே பார்க்கப்படும்.

இன்றைய காலகட்டத்தில் தினக்கூலியாகவும், அன்றாடங்காய்ச்சிகளாகவும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வணிகப் பெருமக்கள் அனைவரும் தங்களின் வணிக நிறுவனங்களை நடத்தி வரும் சூழ்நிலையில் அவர்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டால் ஸ்தம்பிக்கப் போவது சாமானிய மக்களின் வாழ்வும், வணிகப் பெருமக்களின் வாழ்வாதாரமும் மட்டுமே.

எனவே நீங்கள் உங்களுக்கு சொந்தமான அனைத்து வணிக நிறுவனங்களையும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் ஸ்தம்பித்து தமிழகத்தில் நன்மை நடக்க வழி பிறக்கும். அப்போது உலகமே நமது தமிழகத்தை திரும்பி உற்று நோக்கும்.

அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களே எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவீர்களா…! நீங்கள் நிறைவேற்றுவீர்களா ….!! என அதில் கேட்டுள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!