வேப்பந்தட்டை அருகே தந்தையை மறித்த, கணவணை அடித்து கொன்ற மனைவி; எஸ்.பி மணி நேரில் விசாரணை

schedule
2021-07-19 | 08:29h
update
2026-05-02 | 06:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The wife who forgot her father near Vepanthattai, and beat her husband; Inquiry into SP Mani

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 40), இவரது மனைவி அம்சவள்ளி (35), அம்சவள்ளியின் தந்தை வேலுசாமி (60), ராமமூர்த்தியின் அக்காவை வேலுசாமி திருமணம் செய்துள்ளார். இரு குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், வேலூசாமிக்கும், ராமமூர்த்திக்கும் அருகே வயல்கள் உள்ளது. இன்று காலை வேலுசாமி, மாடுகளை ஓட்டிக் கொண்டு, ராமமூர்த்தி வயல்வழியாக சென்ற போது ராமமூர்த்தி மறித்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது ராமமூர்த்தி, வேலுசாமியின் மாடுகளை அருகே கிடந்த குச்சியை கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், இவருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ராமமூர்த்தி மனைவி அம்சவள்ளி, தந்தையிடம் தகராறு செய்ததால் ஆத்தரமடைந்து குச்சியால் ராமமூர்த்தியை தாக்கியதால் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த எஸ்.பி மணி சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். போலீஸ் எஸ்.பி மணி வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமமூர்த்தியின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து எஸ்.பி உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையிடம் தகராறு செய்த கணவனை மனைவி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 06:34:24
Privacy-Data & cookie usage: