பெரம்பலூர் அருகே அறுந்த கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் மற்றும் பசு மாடு, நாய் உயிரிழப்பு

schedule
2017-09-07 | 07:27h
update
2026-07-03 | 14:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The woman and cow dog death, drove on the broken power wire near Perambalur

பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் மனைவி அமிர்தம் (வயது 50). இவர், எழுமூர் கிராமத்திலிருந்து ஆண்டிக்குரும்பலூர் செல்லும் சாலையில் உள்ள அவரது வயலுக்கு சென்றவர் வழக்கம் போல் விவசாய பணிகள் செய் காலை பசு மாடு மற்றும் நாயுடன் வயலுக்கு சென்றுள்ளார்.

Advertisement

அப்போது வயல் பகுதியில் அறுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக அமிர்தம் அழைத்து வந்த பசு மாடு மிதித்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அமிர்தம் மற்றும் அவர் அழைத்து வந்த ஒரு பசு மாடு, மற்றும் செல்லமாக வளர்த்து வந்த நாய் உட்பட மூவரும் உயிரிழந்தனர்.

பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று மங்களமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே அமிர்தம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பற்றி அறிந்து அவரது குடும்பத்தார், உறவினர்கள் உள்ளிட்ட பொது மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு மின் வயர் அறுந்து கிடப்பதாக கடந்த மூன்று நாட்களாக பலமுறை புகார் தெரிவித்தும் மின் வாரிய ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கண்டித்து அமிர்தத்தின் சடலத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்தும், மின் வாரிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்ழ பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து போராட்டத்தை கைவிட செய்த போலீசார் அமிர்தத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 14:35:35
Privacy-Data & cookie usage: