வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் பெண் மனு

schedule
2018-06-04 | 19:57h
update
2026-07-05 | 05:39h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The woman petitioned to the Perambalur collector to restore her husband’s body abroad

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூரை சேர்ந்தவர் தம்புசாமி (வயது 37) இவர் கூலி வேலைக்காக ஏஜன்சி மூலம் ஒரு ஆண்டிற்கு முன் துபாய் நாட்டிற்கு சென்றுள்ளார். அவருக்கு இளவரசி என்ற மனைவியும், தேவிகா, கிஷோர், சிவசக்தி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

இந்நிலையில் கடந்த ஜுன்.2 அன்று அவரது மனைவி இளவரசிக்கு தொலைபேசி மூலம் அவரது கணவர் தம்புசாமி கடந்த மே.5ம் தேதி இறந்து விட்டதாக தகவல் வந்தது. தனது கணவர் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னரே தகவல் கிடைத்ததை அறிந்து அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியும் வேதணையும் அடைந்தனர்.

செய்வதறியாத தம்புசாமியின் மனைவி இளவரசி தனது குழந்தைகளுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே.சாந்தாவிடம் தனது கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி கண்ணீருடன் மனு ஒன்றை அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 05:39:56
Privacy-Data & cookie usage: