பெரம்பலூர் அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

schedule
2017-10-31 | 15:22h
update
2026-07-04 | 04:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The woman slipped and fell near perambalur the load auto from the dead

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கருப்பட்டான் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

Advertisement

இவரது மனைவி செல்வம் (வயது 37), நேற்று முன்தினம் திட்டக்குடி சென்று விட்டு திரும்ப தனது கிராமத்திற்கு ஆட்டோவில் பின்புறம் அமர்ந்து பயணித்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, கருப்பட்டான்குறிச்சி அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்த போது சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியது. அதில் நிலை தடுமாறிய செல்வம் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருங்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பெற்று வந்த செல்வம் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செல்வத்தின் அண்ணன் கீழப்பெரம்பலூரை சேர்ந்த கந்தசாமி குன்னம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 04:14:31
Privacy-Data & cookie usage: