பெரம்பலூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், மயங்கி விழுந்ததில் சாவு!

schedule
2019-04-27 | 08:33h
update
2019-04-27 | 08:33h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Woman was walking near the road, fell unconscious to die! near Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி கலைச்செல்வி (வயது 45), இவர் நேற்று முன்தினம் காலை சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த கலைச்செல்வி காயமடைந்தார். இதை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு, அவருக்கு முதலுதவி செய்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்சிசிச்சைக்காக அங்கிருந்து திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலைச்செல்வி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த போன கலைச்செல்வியின் உடல், உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 01:59:33
Privacy-Data & cookie usage: