பெரம்பலூர் அருகே பேருந்தில் வந்த பெண்ணிடம் மயக்க மருந்து தெளித்து, 10 பவுன், ரூ. 5ஆயிரம் கொள்ளை; போலீஸ் விசாரணை !

schedule
2021-04-02 | 18:59h
update
2021-04-02 | 18:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The woman, who arrived on the bus, was sprayed with anesthetic and 80 gram Gold Jewel, with Rs. 5 thousand robbery; Police investigation!

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள நம்புக்குறிச்சியை (திருச்சி மாவட்டம்) சேர்ந்தவர் அருள்மொழி (வயது 55). தற்சமயம் சென்னையில் கணவருடன் வசித்து வருகின்றார்.நேற்றிரவு சென்னையிலிருந்து சொந்த ஊரான நம்புக்குறிச்சி கிராமத்திற்கு செல்வதற்கு தனியாருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அதே பேருந்தில் பயணம் செய்த மர்ம நபர்கள் தம்பதியினர் மீது மயக்க மருந்து தெளித்து அவர்களின் பையிலிருந்த 10 பவுன் தங்க நகையை, ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து அருள்மொழி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த பாடாலூர் போலீசார் மர்ம நபர்களை அடையாளம் காண தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 21:22:09
Privacy-Data & cookie usage: