The woman’s wear gold chain flush near in perambalur

schedule
2017-04-22 | 17:51h
update
2026-09-23 | 15:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The woman’s wear gold chain flush near in perambalur

பெரம்பலூர் அருகே நடந்த சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு ; போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் நடந்த சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெற்றிச்செல்வன், இவரது மனைவி அஞ்சலி (வயது 25). அஞ்சலியின் மாமனார் தங்கராசு சிறுவாச்சூரில் உள்ள தனலட்சுமி மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார்.

அங்கு வந்த அஞ்சலி உணவு வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அஞ்சலி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 15:42:24
Privacy-Data & cookie usage: