The women are protesting against the wineshop opening in the village of senjeri near Perambalur

schedule
2017-04-22 | 16:41h
update
2026-06-12 | 18:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The women are protesting against the wineshop opening in the village of senjeri near Perambalur || பெரம்பலூர் அருகே செஞ்சேரி கிராமத்தில் மதுக்கடை நடத்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தில் டாஸ்மாக் நிறுவனம் செட்டிக்குளம் செல்லும் சாலையில் மதுக்கடை ஒன்றை திறந்து உள்ளது. இதற்கு தெரிவித்து அக்கிராம பெண்கள் இன்று அந்தக் கடையை முற்றுகையிட்டதுடன், பெரம்பலூர் – துறையூர், சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், பெரம்பலூர் – செட்டிக்குளம், பெரம்பலூர் – துறையூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், வருவாய் துறையினர், டாஸ்மாக் பணியாளர்கள் சமபவ இடத்திற்கு சென்று சமாதான பேச்சு நடத்தினர். ஆனால், பெண்கள் கடையை அப்பகுதியில் திறக்க கூடாது என வலியுறுத்தினர். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருடன் பேசி முடிவு தெரிவிப்பதாக கூறினர். பெண்களோ தாங்கள் வரும் திங்கட்கிழமை குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரை மதுபாட்டில்களுடன் முற்றுகையிட்டு போரட்டம் நடத்தப்போவதாக தெரிவித்து சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 18:09:36
Privacy-Data & cookie usage: