ரூ.39 லட்சம் மதிப்பில் எளம்பலூரில் இருந்து திருச்சி

சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பணி தொடக்கம்

schedule
2017-05-05 | 12:40h
update
2026-06-27 | 19:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The work on connecting the Trichy – Chennai national highway from Elambalur at a cost of Rs. 39 lakh ||
ரூ.39 லட்சம் மதிப்பில் எளம்பலூரில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பணி தொடக்கம்

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூரில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.39,00,000 மதிப்பீட்டில் எளம்பலூரில் இருந்து, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையினை இணைக்கும் வகையில் 1.95 கி.மீ நீளமுள்ள சாலையை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள தார் சாலைப் பணிகளுக்கான பூமி பூஜை இன்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் மூலமாக எளம்பலூரிலிருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு (நெற்குணம் பிரிவு சாலை) செல்லும் வகையில் உள்ள சாலையினை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளம்பலூல் இருந்து குறைந்த நேரத்திலேயே தேசிய நெடுஞ்சாலையினை சென்றடைய ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலயமணி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 19:26:07
Privacy-Data & cookie usage: