மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை! பெரம்பலூரில் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!!

schedule
2019-11-11 | 07:09h
update
2019-11-11 | 07:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The young men who tried to Burn in Perambalur Collector office ; he petition with the lack of action

பெரம்பலூர் அருகே கொடுத்த பெற்றுத் தரக்கோரி மனு கொடுத்தும் பலனில்லாததல் வாலிபர் கலெக்டர் ஆபிசில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் 3வது வார்டு பகுதியை சேர்ந்த செங்கமலை மகன் ராஜேந்திரன் (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் – சரோஜா தம்பதியினருக்கு வீடு கட்டுவதற்காக சுமார் ரூ. 8 லட்சம் கொடுத்தாகவும், அதைப் பெற்றுத் தர பெரம்பலூர் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும், எதிர் தரப்பினர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாலும், மனமுடைந்த ராஜேந்திரன் இன்று நடைபெற்ற கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த அவர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர் தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தி, அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பபவம் அப்பகுதியில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 19:38:20
Privacy-Data & cookie usage: