பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர், அரசு பேருந்து மோதி பலி

schedule
2019-12-27 | 09:42h
update
2019-12-27 | 09:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The young men who tried to cross the road, the bus hit a sacrifice , Near Perambalur

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எளம்பலூர் தண்ணீர்பந்தல் பகுதியில், சாலையைக் கடக்க முயன்ற அதே பகுதியை சேர்ந்த ரெங்கன் மகன் குணசேகரன்(31), என்ற வாலிபர் மீது குமுளியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக குணசேகரன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்து கிடந்த குணசேகரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்துக்கு காரணமான பேருந்தை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 08:38:12
Privacy-Data & cookie usage: