பெரம்பலூர் மருத்துவமனையில் இருந்து தப்பித்த வாலிபர் ஏரியில் பிணமாக மீட்பு!

schedule
2023-05-28 | 08:38h
update
2023-05-28 | 08:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

The Youth who escaped from the Perambalur hospital was recovered as a dead body in the lake!

பெரம்பலூர் நகரில் உள்ள கீழேரி என்றழைக்கப்படும் வெள்ளந்தாங்கி ஏரியில் இன்று காலை 30 வயது மதிக்க தக்க வாலிபரின் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பெரம்பபலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் தலையிலான போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படை உதவியுடன் ஏரியில் கிடந்த சடலத்தை மீட்ட, போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இறந்து போன வாலிபர் கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள கொரக்கவாடி கிராமத்தை சேர்ந்த மருதமுத்து மகன் மதியழகன் (29) என்பது தெரிய வந்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், மதியழகன் அளவிற்கு அதிமான மது போதையால், ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தத்தால், கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு,மனநிலை பாதிக்கபட்டவர் போல் நடந்து கொண்டதால், கடந்த மே. 24ம் தேதி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கிருத்து தப்பித்து சென்றவர் வீட்டிற்கு வந்து சேராததாலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்து கிடைக்காததால் பெரம்பலூர் காவல் நிலையத்தில், காணவில்லை புகாரும் கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

Advertisement

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உடற்கூறு ஆய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 02:11:23
Privacy-Data & cookie usage: