பெரம்பலூரில் இரு வெவ்வேறு இடங்களில் திருட்டு! 7 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் கொள்ளை!!

schedule
2019-11-28 | 06:56h
update
2019-11-28 | 06:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft at two different locations in Perambalur 7 Sovereing Jewelry Cash Rs 15 Thousand Loot !!

பெரம்பலூரில் நேற்றிரவு இரு வேறு இடங்களில் நடந்த கொள்ளையில் 7 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரொக்கப் பணம், மற்றும் பட்டுப்புடவைகள் கொள்ளை போனது.

பெரம்பலூர் நகரில் உள்ள பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராஜாதேசிங் (வயது 61). கடந்த நவ 26ம் தேதியன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அவருடைய மாமனர் இறந்து விட்டதால் அதற்கான காரியத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார். இன்று காலை திரும்பி வந்து வீட்டை திறக்க முயன்ற பொது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 3பவுன் செயின், 1 பவுன் மதிப்பில் 4 ஜோடி தோடுகள்,1.5 பவுன் கைசெயின், 1 பவுனில் 2 காயின், அரைப்பபுவுன் மோதிரம், வெள்ளிக் கொலுசு மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு, கைரேகை மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதே போன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் கல்யாண் நகர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயத 58), என்பவர் உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் பட்டுபுடவைகள் உள்ளிட்ட பொருட்களை களவாடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரிலும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டு உள்ள பனிமூட்டம் குளிரால் மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது கொள்ளையர்களுக்கு சாதகமாகி உள்ளளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 11:56:54
Privacy-Data & cookie usage: