பெரம்பலூர் அருகே கோயிலில் திருட்டு: போலீசார் விசாரணை!

schedule
2022-11-22 | 05:49h
update
2022-11-22 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft in a temple near Perambalur: Police investigating!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவம், அப்பகுதியில் பரபப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

இன்று காலை 5.30 மணி அளவில் அப்பகுதி மக்கள் பார்த்த போது, கோயிலின் கதவுகள் திறந்து கிடப்பதை, கோயில் தர்மகர்த்தா, இளையராஜா-விற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர், வந்து பார்த்த போது கோவிலின் கிரில் கேட் பூட்டு மற்றும் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி சிலையின் கழுத்தில் போட்டிருந்த நகை மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. பொட்டு தாலி- 3/4 பவுன், குண்டு-1/4 பவுன், லட்சுமி காசு -1/2, பவுன் மாங்காய் காசு – 1/2 பவுன் மொத்தம் 2 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் எடுத்து சென்றனர்.

Advertisement

இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தர்மகர்த்த கொடுத்த தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார், மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, குற்றவாளிகளை அடையாளம் பணியில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 08:41:38
Privacy-Data & cookie usage: