பெரம்பலூர் அருகே 1.5 கிலோ வெள்ளி கொலுசுகள் திருட்டு: 4 பெண்கள் உட்பட 6 பேர் கைவரிசை!

schedule
2019-10-20 | 07:06h
update
2019-10-20 | 07:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft of 1.5 kg of silver colossus near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சி சேர்ந்தவர் முகமது இப்ராஹிம்(45), இவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள கடை வீதி பகுதியில் ரஹமத் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார்.

நேற்று வழக்கம்போல், கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த முகமது இப்ராஹிம் கடைக்கு வந்த நான்கு பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் நகை வாங்குவது போல் நடித்து, முகமது இப்ராஹிம் மற்றும் விற்பனையாளர் பத்மப்பிரியா ஆகியோரின் கவனத்தை திசை திருப்பி ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிலான ஒன்றரைக் கிலோ வெள்ளிக் கொலுசுகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர்.

Advertisement

இதனைத்தொடர்ந்து கடைக்கு வந்த சில வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தை முடித்த முகமது இப்ராஹிம் மற்றும் விற்பனையாளர் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கணக்கிட்டு பார்த்த போது, ஒன்றரைக் கிலோ வெள்ளி கொலுசுகள் திருடு போனது தெரிய வந்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது இப்ராஹிம் சம்பவம் குறித்து மங்களமேடு போலீசுக்கும் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தடயங்களை சேகரித்தும், சம்பந்தப்பட்ட நகை கடையில் உள்ள

சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள கிராமப் பகுதியிலுள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 6 பேர் கொண்ட கும்பல் வெள்ளிக் கொலுசுகளை திருடிச்சென்ற சம்பவம் வாலிகண்டபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 09:37:02
Privacy-Data & cookie usage: