பெரம்பலூர் அருகே சுமார் 15 பவுன் நகை திருட்டு; போலீசார் விசாரணை!

schedule
2022-01-19 | 08:05h
update
2022-01-19 | 08:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Theft of about 15 pounds of jewelery near Perambalur; Police investigation!

பெரம்பலூர் மாவட்டம், கொளாக்காநத்தம் அருகே உள்ள அனைப்பாடி கிராமத்தில் சுமார் பதினைந்தரை பவுன் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

அனைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளாளி. இவரது மகன்கள் ராமசாமி (வயது 43), முருகானந்தம் (40), இருவரும் திருணமாகி கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நேற்றிரவு வழக்கம் போல், தூங்கி எழுந்து வந்த பார்த்த போது சுமார் 9.30 மணி அளவில், முருகானந்தம் இருக்கும் அறையில் வெளிப்புற கதவு உள்புற கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. அறையில் உள்ள பீரோவில் சாவி தொங்கிய நிலையிலும், உள்ளே இருந்த துணிகள் கலைந்த நிலையிலும், உள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் காணவில்லை. ரூ 50 ஆயிரம் அப்படியே இருந்தது, ஆரம் -5 பவுன், நக்லஸ் -2 1/2 பவுன், கருவமணி செயின்-3 பவுன், தாலி கொடி மட்டும் 3 பவுன், கம்மல் 4 ஜோடி 2 பவுன் மோதிரம்-2 கிராம் மொத்தம் பதினைந்தரை பவுன் காணமல் போயிருந்தது. தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து, மருவத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:11:34
Privacy-Data & cookie usage: